வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை - இந்தியர்களுக்கு எச்சரிக்கை

August 5, 2024

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. தற்போது போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதுவரை இந்த கலவரத்தால் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இட ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வந்த போதிலும் பிரதமர் ஷேக் அசினா பதவி விலக வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் செய்கின்றனர். அதோடு இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து […]

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது.

தற்போது போராட்டக்காரர்களுக்கும் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதுவரை இந்த கலவரத்தால் மொத்தம் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இட ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வந்த போதிலும் பிரதமர் ஷேக் அசினா பதவி விலக வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் செய்கின்றனர். அதோடு இந்த போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதையடுத்து நாடு முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வங்காளதேசத்தில் வாழும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதோடு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu