வங்கதேசத்தில் காவல்துறையினர் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.
வங்கதேசத்தில் காவல்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இடைக்கால அரசுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டனர். வன்முறை சம்பவங்களில் 400க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் சேதம் அடைந்தன. இதையடுத்து கடந்த ஆறாம் தேதி முதல் காவல் துறையினர் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கு மொத்தம் 639 காவல் நிலையங்கள் உள்ளன. அதில் 628 காவல் நிலையங்களில் போலீசார் இன்று பணிக்கு திரும்பி உள்ளனர்.
வங்கதேசத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து இராணுவத்தினர் மீண்டும் எல்லை பாதுகாப்பு பணிகளுக்கு திரும்புவார்கள் என்று ராணுவ தளபதி கூறியுள்ளார்.