வங்கதேசத்தின் இடைக்கால அரசு, ராணுவத்துக்கு சட்டரீதியிலான முடிவுகளை எடுப்பதற்கான மாஜிஸ்திரேட் அதிகாரத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது உடனடியாக அமலுக்கு வருகிறது. நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணவும் அரசுக்கு எதிரான கிளா்ச்சி நடவடிக்கைகளைத் தடுக்கவும் இரண்டு மாதங்கள் வரை ராணுவம் இந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில், அனுமதியில்லாமல் கூட்டங்களை கலைத்தல் மற்றும் தற்காப்புக்காக கூட்டத்தின்மீது துப்பாக்கிச்சூடு செய்வது போன்ற நடவடிக்கைகள் எடுக்க முடியும். கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா, மாணவா்களின் போராட்டத்தால் ராஜிநாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். போலீசாரின் படுகொலைகளால் ஏற்பட்ட குழப்பத்தில், காவல்துறைக்கு போதிய ஆதரவு இல்லாததால் ராணுவத்துக்கு இத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.