காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு, இளைஞர் காங்கிரஸின் கணக்கு ஆகியவை முடக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு கட்சிகள் நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாஜக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேர்தல் பிரச்சார சட்டம் செல்லாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து நிதி பெறுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த வங்கி கணக்குகள், காங்கிரஸ் கட்சியின் கணக்கு, இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கணக்கு ஆகியவை முடக்கப்பட்டது என காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்த முடக்கத்திற்கு கடும் கண்டனத்தை காங்கிரஸ் தெரிவித்திருந்தது. பின்னர் வருமானவரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. அதன் பின் முடக்கப்பட்ட வங்கிகள் விடுவிக்கப்பட்டன. இந்நிலையில் வருமானவரித்துறையின் நடவடிக்கைகளை நிறுத்த கோரி காங்கிரஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டது.