இன்று இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 81,183 ஆகவும், நிஃப்டி 50 24,900 க்கு கீழே சரிந்து 24,852 ஆகவும் நிறுவைடைந்துள்ளது. இந்த சரிவு முறையே 1.24% மற்றும் 1.17% ஆகும். மேலும், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ₹5.2 லட்சம் கோடி குறைந்து ₹460.46 லட்சம் கோடியாக உள்ளது.
உலகின் மற்ற நாடுகளில் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்து வருவது, இந்திய பங்குச் சந்தையையும் பாதித்துள்ளது. இன்றைய நாளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் இன்ஃபோசிஸ் உள்ளிட்டவை, ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, எல்&டி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் கூடுதல் சரிவுகளுடன், வீழ்ச்சிக்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளன.