அமெரிக்காவில் இந்து கோவிலில் மதவெறுப்பு வாசகங்கள்

September 27, 2024

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் அமைந்துள்ள 'பாப்ஸ்' இந்து கோவிலில் மர்ம நபர்கள் மதவெறுப்பு வாசகங்களை எழுதினர். இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 'பாப்ஸ்' (BAPS) அமைப்பு இந்தியா மற்றும் உலகளாவிய அளவில் இந்து கோவில்கள் கட்டி நிர்வகிக்கிறது. இந்நிலையில், கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் அமைந்துள்ள 'பாப்ஸ்' கோவிலில் மர்ம நபர்கள் மதவெறுப்பு வாசகங்களை எழுதினர். இதில் "இந்துக்களே திரும்பி செல்லுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, 17-ந்தேதி, நியூயார்க்கின் மெல்வில் பகுதியில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் […]

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் அமைந்துள்ள 'பாப்ஸ்' இந்து கோவிலில் மர்ம நபர்கள் மதவெறுப்பு வாசகங்களை எழுதினர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 'பாப்ஸ்' (BAPS) அமைப்பு இந்தியா மற்றும் உலகளாவிய அளவில் இந்து கோவில்கள் கட்டி நிர்வகிக்கிறது. இந்நிலையில், கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் அமைந்துள்ள 'பாப்ஸ்' கோவிலில் மர்ம நபர்கள் மதவெறுப்பு வாசகங்களை எழுதினர். இதில் "இந்துக்களே திரும்பி செல்லுங்கள்" என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக, 17-ந்தேதி, நியூயார்க்கின் மெல்வில் பகுதியில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலிலும் இதே விதமாக மதவெறுப்பு வாசகங்கள் எழுதியிருந்தனர். கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் 2-வது முறையாக இது நிகழ்ந்ததால் அங்குள்ள இந்துக்கள் கவலையாக உள்ளனர். மேலும், அமெரிக்காவில் இந்துக்கள் மீதான மதவெறுப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu