நீண்ட தூர ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
நீண்ட தூர ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்கு நெரிசலுடன் சேர்த்து பல அசௌரியங்களும் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் அனைத்து நிலையங்களிலும் ரயில் நிற்கும் போது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளுக்கு அருகில் மலிவு விலை உணவு குடிநீருடன் நடமாடும் விற்பனை நிலையம் இருப்பதை உறுதி செய்ய மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மை பணியாளரை சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளுக்கு தடையற்ற தண்ணீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன் ரயில் நிலையங்களில் அந்த பெட்டிகளுக்கு அருகிலேயே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.