புதிய செய்தி ஏஜென்சியை தொடங்கியது பிபிசி இந்தியா

April 15, 2024

வருமானவரித்துறையின் தொடர் சோதனைகளினால் பிபிசி இந்தியா கலெக்டிவ் நியூஸ் ரூம் என்ற பெயரில் தனியாக செய்தி ஏஜென்சியை தொடங்கியுள்ளது. பிரிட்டன் அரசாங்கத்தின் பொது நிறுவனத்தின் கிளையாக பிபிசி இந்தியா நிறுவனம் இயங்கி வந்தது. இது பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது. மேலும் இங்கு பணியாற்றிய 7 மொழிகளின் பிரிவுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பிபிசி ஊழியர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் வெளியிட்டதும் […]

வருமானவரித்துறையின் தொடர் சோதனைகளினால் பிபிசி இந்தியா கலெக்டிவ் நியூஸ் ரூம் என்ற பெயரில் தனியாக செய்தி ஏஜென்சியை தொடங்கியுள்ளது.

பிரிட்டன் அரசாங்கத்தின் பொது நிறுவனத்தின் கிளையாக பிபிசி இந்தியா நிறுவனம் இயங்கி வந்தது. இது பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது. மேலும் இங்கு பணியாற்றிய 7 மொழிகளின் பிரிவுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களும் பிபிசி ஊழியர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாகவும் அப்போதைய முதல்வராக இருந்த பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் வெளியிட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது வெளியான அடுத்த சில வாரங்களில் இந்திய பிபிசி நிறுவனத்தின் டெல்லி, மும்பை உட்பட்ட அலுவலகங்களில் வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு காரணமாக வருமானவரித்துறை தொடர் சோதனைகள் நடத்தி வந்தனர். மேலும் நிறுவனத்தின் மீது விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்ததால் அலுவலகம் இந்தியாவில் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து கலெக்டிவ் நியூஸ் ரூம் என்ற பெயரில் தனியாக செய்தி ஏஜென்சியை பிபிசி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த ஏஜென்சி இந்தியாவிலிருந்து பிபிசி நிறுவனத்திற்கு செய்திகளை தயாரித்து தர உள்ளத அதன்படி பிபிசி நியூஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி என ஆறு மொழிகளுடன் பிபிசி ஆங்கிலத்திற்கும் டிஜிட்டல் மற்றும் யூடியூபில் இந்திய நேயர்களுக்கான செய்திகளை இந்த ஏஜென்சி தயாரித்து வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu