ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான இறுதிப் போட்டி முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் தொடரின் 17வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் கொண்ட விவரம் வெளியானது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ளவற்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டியின் […]

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான இறுதிப் போட்டி முழு அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதில் மார்ச் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் கொண்ட விவரம் வெளியானது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டிருந்த நிலையில் மீதமுள்ளவற்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டி மே 26-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் தகுதி சுற்று, எலிமினேட்டர் போட்டிகள் அகமதாபாத்தில் மே 21 மற்றும் 22 ஆம் தேதிகளிலும் இரண்டாவது தகுதி சுற்று மே 24 மற்றும் இறுதி போட்டி மே 26 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு போட்டிகளுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu