மின் துறை செயலராக பீலா ராஜேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழகத் தலைமைச் செயலர் இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் தமிழக நில சீர்திருத்த துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், மின்துறை செயலராகவும், திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (டிஆர்டிஏ) திட்ட அலுவலர் வீர் பிரதாப் சிங், சென்னை வணிக வரிகள் துறை நுண்ணறிவு பிரிவு இணை ஆணையராகவும், சேலம் பட்டுப்புழு வளர்ச்சி துறை இயக்குநர் ஜெ.விஜயா ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் ஆணையராகவும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) மேலாண் இயக்குநர் எம்.ஆசியா மரியம், சிறுபான்மையினர் நல இயக்குநராகவும், ஊரக வளர்ச்சி துறை இணை செயலர் சந்திரசேகர் சாகமுரி, பட்டுப்புழு வளர்ச்சி துறை இயக்குநராகவும், தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன (டுபிசெல்) தலைவராக தமிழ்நாடு சிறுதொழில் கழக தலைவர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.