சீனா - பெய்ஜிங்கில் 40 டிகிரியை தாண்டிய வெப்பநிலை - வரலாற்று வெப்பமான நாளாக பதிவு

June 22, 2023

சீனாவில், இந்த ஜூன் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக கூறப்படுகிறது. வழக்கத்தைவிட அங்கு வெப்பநிலை உயர்ந்தே காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம், பெய்ஜிங் வரலாற்றில் அதிக வெப்பம் கொண்ட நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் இன்று பதிவாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, வெப்பநிலை 40 டிகிரியை தாண்டுவது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் வானிலை மையம் அளித்த தகவல் படி, தெற்கு பெய்ஜிங்கில் 40.7 டிகிரி செல்சியஸ் […]

சீனாவில், இந்த ஜூன் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக கூறப்படுகிறது. வழக்கத்தைவிட அங்கு வெப்பநிலை உயர்ந்தே காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம், பெய்ஜிங் வரலாற்றில் அதிக வெப்பம் கொண்ட நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பம் இன்று பதிவாகியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, வெப்பநிலை 40 டிகிரியை தாண்டுவது இதுவே முதல் முறையாகும்.

அந்நாட்டின் வானிலை மையம் அளித்த தகவல் படி, தெற்கு பெய்ஜிங்கில் 40.7 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. முன்னதாக, கடந்த 1961 ஜூன் 10ஆம் தேதி, 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு செய்யப்பட்டதே அதிகபட்ச வெப்ப நிலையாக இருந்தது. தற்போது, 40.7 டிகிரியுடன் இன்றைய தினம் பெய்ஜிங் வரலாற்றில் மிகவும் வெப்பமான நாளாக மாறியுள்ளது. வெப்ப அலை காரணமாக சீனாவின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டு வருகிறது.வெப்பநிலை உயர்வு குறித்து ஏற்கனவே பெய்ஜிங்கில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu