லெபனான் இஸ்ரேல் இடையே போர் மூளும் அபாயம்

June 25, 2024

லெபனானில் உள்ள தீவிரவாதிகளை அழிக்கும் வரை தீவிர தாக்குதல் நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார். காசா போரின் இறுதி நிலையை அடைந்து விட்டதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார். எனினும் லெபனானில் உள்ள தீவிரவாதிகளை அழிக்கும் வரை தீவிர தாக்குதல் நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, காசா போரில் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க தீவிர தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது இப்பொழுது இறுதி […]

லெபனானில் உள்ள தீவிரவாதிகளை அழிக்கும் வரை தீவிர தாக்குதல் நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார்.

காசா போரின் இறுதி நிலையை அடைந்து விட்டதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறியுள்ளார். எனினும் லெபனானில் உள்ள தீவிரவாதிகளை அழிக்கும் வரை தீவிர தாக்குதல் நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, காசா போரில் ஹமாஸ் தீவிரவாதிகளை அழிக்க தீவிர தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது இப்பொழுது இறுதி நிலையை அடைந்துள்ளது. இதன் பிறகு வடக்கு காசாவில் இருந்து கணிசமான இஸ்ரேல் படையினர் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படுவார்கள். பின்னர் லெபனானில் உள்ள இஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு எதிராக முழு வீச்சு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளோம். அவர்களுடனான பிரச்சனையை பேச்சுவார்த்தையில் தீர்க்க தயாராக நாங்கள் இருந்த போதிலும் ராணுவ ரீதியாக தீர்க்கவும் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் ராணுவம் மிகவும் பலமானது எந்த போரையும் எதிர்கொள்ளும் வல்லமை கொண்டது என்றார்.

ஹமாசை முற்றிலுமாக அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று கூறிய அவர், காசா பகுதியில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் கடுமையாக நடைபெற்று வருகிறது என்றார். இந்த தாக்குதலில் இதுவரை 37,431-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu