பெங்களூரு குண்டுவெடிப்பு - கேமராவில் சிக்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்

பெங்களூரில் ஒயிட் பீல்டு அருகே உள்ள பிரபல ஹோட்டலில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் ஒயிட்ஃபீல்டு அருகே இயங்கி வரும் பிரபல ஹோட்டல் ஒன்றில் மதியம் ஒரு மணி அளவில் 250க்கும் மேற்பட்ட வாடகையாளர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு ஹோட்டலில் இருந்து அலறி அடித்து பயணிகள் வெளியே ஓடி வந்தனர். முதல் குண்டுவெடி அடுத்த 10 நிமிடங்களில் இரண்டாவது குண்டு மீண்டும் […]

பெங்களூரில் ஒயிட் பீல்டு அருகே உள்ள பிரபல ஹோட்டலில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஒயிட்ஃபீல்டு அருகே இயங்கி வரும் பிரபல ஹோட்டல் ஒன்றில் மதியம் ஒரு மணி அளவில் 250க்கும் மேற்பட்ட வாடகையாளர்கள் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு ஹோட்டலில் இருந்து அலறி அடித்து பயணிகள் வெளியே ஓடி வந்தனர். முதல் குண்டுவெடி அடுத்த 10 நிமிடங்களில் இரண்டாவது குண்டு மீண்டும் வெடித்தது. இதில் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி தெரிய வந்ததும் போலீசார், மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு முகமை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குண்டு வெடிப்பு தொடர்பாக நடத்திய சோதனையில் ஒரு டைமேர் கருவி,நட்டுகள், போல்டுகள், உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டலில் குண்டு வைத்தது யார் என்ற விசாரணையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தலையில் தொப்பி அணிந்து கொண்டு முகக் கவசம் அணிந்தபடி குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் சந்தேக படும் படியாக நடந்து கொண்டது பதிவாகியுள்ளது. இவரை தேட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu