கடந்த 2023 ல் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் அழகு சாதனப் பொருட்கள் தளமான டிராவின் தலைமை நிர்வாக அதிகாரியாக முகேஷ் அம்பானியின் முக்கிய கூட்டாளியான மனோஜ் மோடியின் மகள் பக்தி மோடி நியமிக்கப்பட்டார். அதன்படி, தனது இளம் வயதில் இஷா அம்பானியுடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். மேலும், அவரது வழிகாட்டியாக வி சுப்பிரமணியம் உள்ளார். இந்த நிலையில், டிரா நிறுவனத்தின் தலைமை பொறுப்பை அவர் முழுவதுமாக ஏற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ரிலையன்ஸின் அழகு மற்றும் பேஷன் பிரிவுகளை வடிவமைப்பதில் பக்தி முக்கிய பங்கு வகிக்கிறார். செபோரா மற்றும் கிகோ மிலானோ போன்ற நிறுவனங்கள் உடனான கூட்டாண்மைகளை மேற்பார்வை செய்கிறார். டிரா நிறுவனம், நைக்கா போன்ற நிறுவனங்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.