தேர்தல் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட பாரத் அரிசி பறிமுதல்

March 20, 2024

பெங்களூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ எடையுள்ள 940 பைகள் கொண்ட பாரத் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் சில இடங்களில் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பல படைகளை நியமித்து கண்காணித்து வருகிறார். இதில் பெங்களூரு கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாஜக சார்பில் மத்திய அரசின் பாரத் அரிசி […]

பெங்களூரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ எடையுள்ள 940 பைகள் கொண்ட பாரத் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும் சில இடங்களில் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பல படைகளை நியமித்து கண்காணித்து வருகிறார். இதில் பெங்களூரு கோவிந்தராஜ் நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாஜக சார்பில் மத்திய அரசின் பாரத் அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு சென்று அரிசி விநியோகப்பதை தடுத்தனர். மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரிசி விற்பனை செய்யக்கூடாது என தடுத்து 10 கிலோ எடை உள்ள 940 அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது பறக்கும் படையினர் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu