ஆகஸ்ட் 15 - ஆம் தேதி முதல் டிசம்பர் 13 வரை 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறந்து விட அனுமதிக்கப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் முதல் போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 13 வரை 120 நாட்களுக்கு தேவையான தண்ணீர் திறந்து விட அனுமதிக்கப்பட்டுள்ளது. இது கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் 1,03, 500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 23,846.46 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.