இன்றைய வர்த்தக நாளில், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் - பெல் பங்குகள் கிட்டத்தட்ட 10% உயர்ந்து உச்சத்தை தொட்டுள்ளன. குறிப்பாக, அதானி பவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக செயல்படும் மகான் எனர்ஜென் லிமிடெட் நிறுவனத்தின் ஆர்டரை பெற்றுள்ளதாக, பெல் நிறுவனம் அறிவித்த பிறகு, இந்த உயர்வு பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், மும்பை பங்குச் சந்தையில், பெல் நிறுவன பங்குகள் 110.9 ரூபாய்க்கு வர்த்தகமானது.
எஸ்ஸார் பவர் எம் பி லிமிடெட் என்று அழைக்கப்பட்ட நிறுவனம், அதானி பவர் கீழ், மகான் எனர்ஜென் லிமிடெட் பெயரில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 4000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர், இந்திய அரசின் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியின் விளைவு இன்றைய பங்கு உயர்வின் முக்கிய காரணமாக சொல்லப்பட்டுள்ளது.