பிரதமர் மோடி பூட்டானில் மருத்துவமனையை திறந்தார்

March 23, 2024

திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட ஜியால்சுன் ஜெட்சன் பிமா தாய்-சேய் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் மோடி பூட்டானுக்கு இரண்டு நாள் அரசு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார். இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏற்றி நின்றபடி மக்கள் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி எழுதிய கர்பா என்ற […]

திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட ஜியால்சுன் ஜெட்சன் பிமா தாய்-சேய் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி பூட்டானுக்கு இரண்டு நாள் அரசு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பாரோ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை சென்றடைந்தார். அவரை பூட்டான் பிரதமர் செரிங் டோபே நேரில் சென்று வரவேற்றார். இந்தியா மற்றும் பூட்டானின் தேசிய கொடிகளை ஏற்றி நின்றபடி மக்கள் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி எழுதிய கர்பா என்ற பாடலுக்கு பாரம்பரிய உடை அணிந்து நடன கலைஞர்கள் நடனம் ஆடினர். அதைத்தொடர்ந்து நரேந்திர மோடிக்கு பூட்டானின் உயரிய சிவில் விருதான 'ஆர்டர் ஆப் தி துர்க் கியால்போ' விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பூட்டான் மன்னர் வாங்கு சுக் வழங்கினார். இந்த விருதைப் பெற்ற முதல் வெளிநாட்டு அரசு தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். அதோடு திம்புவில் இந்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட ஜியால்சுன் ஜெட்சன் பிமா தாய்-சேய் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu