இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அங்கு அதிபர் ஜோ பிடென் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது காசா போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைதிக்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு நேதன்யாகுவை பிடென் வற்புறுத்தினார் என்று வெள்ளை மாளிகை தகவல் அளித்துள்ளது. தற்பொழுது அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் களம் இறங்கியுள்ளார். அவர் நேதன்யாகுவுடன் காசா போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 9 மாதங்களாக காசாவில் கொடூரமான போர் நடைபெற்றது. அங்கு பசியில் வாடும் குழந்தைகள் மற்றும் மக்களை கண்டு கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இவற்றைக் கண்டு நான் அமைதியாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அங்கு காசா மக்கள் படும் துயர் குறித்தும், நிலவும் மனிதநேய பிரச்சினை குறித்தும் நேதன்யாகுவிடும் கவலையை தெரிவித்ததாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் ஹமாசும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டு இரு தரப்பிலும் கைதிகளை விடுவிக்க வேண்டும். போரை உடனடியாக நிறுத்த இதுவே சரியான தருணம் என்றும் வலியுறுத்தியதாக கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். இதோடு இன்று குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை நேதன்யாகு சந்திக்க உள்ளார்.