காசாவில் அமெரிக்க தூதரகம் அமைக்க உத்தரவு

March 9, 2024

காசாவின் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். காசாவிற்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக அங்கு கடலோர பகுதியில் தற்காலிகமாக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு ராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் நாடாளுமன்ற உரையில் கூறியதாவது, ஹமாசுடன் நடைபெறும் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. இருந்தபோதிலும், காசாவில் மனிதாபிமான பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை […]

காசாவின் கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்க அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

காசாவிற்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக அங்கு கடலோர பகுதியில் தற்காலிகமாக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு ராணுவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் நாடாளுமன்ற உரையில் கூறியதாவது, ஹமாசுடன் நடைபெறும் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. இருந்தபோதிலும், காசாவில் மனிதாபிமான பணிகள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கடுமையாக தவித்து வருகின்றனர். அவர்களிடம் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்காக கடலோரப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படாவிட்டால் பஞ்சம் ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் மக்கள் பலியாவார்கள் என்று ஐ.நா தொடர்ந்து எச்சரித்து வண்ணம் உள்ளது. அதற்கேற்றார் போல் இதுவரை 20 பேர் பட்டினியால் பலியாகி உள்ளனர் என்று காசா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu