உக்ரைன், அமெரிக்கா இடையே 10 ஆண்டுகள் ஒப்பந்தம்

June 15, 2024

உக்ரைன், அமெரிக்கா இடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இத்தாலியில் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைனுக்கு […]

உக்ரைன், அமெரிக்கா இடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இத்தாலியில் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் நேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஜோ பைடன் மற்றும் ஜெலன்ஸ்கி ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி உக்ரைனுக்கு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு பல்வேறு வகையில் ராணுவ உதவிகள் மற்றும் பயிற்சியை அமெரிக்கா வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். அதோடு நேட்டோ அமைப்பில் இணைவதற்கு இது ஒரு பாலமாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

எதிர்காலத்தில் உக்ரைன் மீது ரஷ்யா ஆயுத தாக்குதலை நடத்தினால் அமெரிக்காவும், உக்ரைனும் 24 மணி நேரத்திற்குள் உயர்மட்ட ஆலோசனையை நடத்தி முடிவு எடுக்க வேண்டும் என்று இந்த புதிய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதே போல் உக்ரைனும், ஜப்பானும் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu