இன்றைய தின வர்த்தகத்தில், அதானி குழும பங்குகள் கடும் உயர்வை பதிவு செய்துள்ளன. இதனால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்கள் ஒரே நாளில் அதிக லாபத்தை ஈட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், அதானி குழுமத்தை சேர்ந்த அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 20% வரை உயர்ந்தது. அதானி குழும நிறுவனங்களில் இதுவே அதிகபட்ச உயர்வாக இருந்தது. இது தவிர, அதானி எனர்ஜி 13%, அதானி பவர் 8.4%, அதானி கிரீன் எனர்ஜி 7.8%, அதானி எண்டர்பிரைசஸ் 7%, அதானி வில்மர் 6.8%, என்டிடிவி 6.4%, அதானி போர்ட்ஸ் 3.7%, அம்புஜா சிமெண்ட்ஸ் 3.6% உயர்வை பதிவு செய்துள்ளன.