முன்னாள் பிளிப்கார்ட் அதிகாரியின் புத்தாக்க நிறுவனத்தில் ரூ. 200 கோடி முதலீடு செய்த பின்னி பன்சால்

March 18, 2024

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை தோற்றுநர் பின்னி பன்சால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் தொடங்கிய புத்தாக்க நிறுவனத்தில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி அங்கித் நகோரி, க்யூர் ஃபுட்ஸ் என்ற புத்தாக்க நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், கிளவுட் கிச்சன் பாணியில் செயல்படுகிறது. இதில் பின்னி பன்சால் 200 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்துள்ளார். ஏற்கனவே அவர் செய்த முதலீடுகளை கணக்கிட்டு, தற்போது […]

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை தோற்றுநர் பின்னி பன்சால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் தொடங்கிய புத்தாக்க நிறுவனத்தில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி அங்கித் நகோரி, க்யூர் ஃபுட்ஸ் என்ற புத்தாக்க நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், கிளவுட் கிச்சன் பாணியில் செயல்படுகிறது. இதில் பின்னி பன்சால் 200 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்துள்ளார். ஏற்கனவே அவர் செய்த முதலீடுகளை கணக்கிட்டு, தற்போது மொத்தமாக 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், க்யூர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 3000 கோடி அளவில் உயர்ந்துள்ளது. அத்துடன், பின்னி பன்சால் செய்த முதலீட்டு தொகை பிரபல பிராண்டுகளின் ஆப்லைன் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu