ஒடிசாவில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பிபிலியில் கோழிகளை கொன்றழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தது.
ஒடிசாவின் புரி மாவட்டத்தின் பிபிலி பகுதியில் பறவைக்காய்ச்சல் வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனுடன், மாநில அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. சுகாதாரத்துறை உஷார் நிலையை அறிவித்து, பிபிலி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை கொன்று அழிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 13 குழுக்கள் அமைக்கப்பட்டு, சில பண்ணைகளில் உரிமையாளர்களே பணிகளை மேற்கொண்டனர். கடந்த 23-ந்தேதி தொடங்கி, நேற்று மாலை 11,700 கோழிகள் கொன்றழிக்கப்பட்டது. இன்று அருகிலுள்ள வீடுகள் மற்றும் கிராமங்களில் கோழிகளை அழிக்கும் பணிகள் நடைபெற உள்ளன.