அமெரிக்காவின் பர்மிங்கம் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணம் பர்மிங்கம் நகரில் உள்ள ஒரு கேளிக்கை விடுதிக்கு வெளியே நேற்று இரவு, கும்பல் ஒன்றினர் காரில் வந்து, விடுதி அருகே நின்றிருந்தவர்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து போலீசார் தகவலறிந்து விரைந்து வந்தனர். படுகாயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். துப்பாக்கி சூடு மேற்கொண்ட கும்பலை பிடிக்க தீவிரமாக தேடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.