ஐடிசி நிறுவனத்துக்கு 1 லட்சம் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம்

September 6, 2023

அண்மையில், நுகர்வோர் நீதிமன்றம் ஐடிசி நிறுவனத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பிஸ்கட் பாக்கெட்டில், ஒரு பிஸ்கட் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. சென்னையை சேர்ந்த டில்லி பாபு என்ற நபர், கடந்த டிசம்பர் 2021 ல், 2 டஜன் சன்ஃபீஸ்ட் மேரி லைட் பிஸ்கட் பாக்கெட் வாங்கி உள்ளார். அவற்றில் ஒரு பாக்கெட்டில், 16 பிஸ்கட்களுக்கு பதிலாக 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்துள்ளன. இதனை ஐடிசி நிறுவனத்தின் […]

அண்மையில், நுகர்வோர் நீதிமன்றம் ஐடிசி நிறுவனத்துக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பிஸ்கட் பாக்கெட்டில், ஒரு பிஸ்கட் குறைவாக கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சென்னையை சேர்ந்த டில்லி பாபு என்ற நபர், கடந்த டிசம்பர் 2021 ல், 2 டஜன் சன்ஃபீஸ்ட் மேரி லைட் பிஸ்கட் பாக்கெட் வாங்கி உள்ளார். அவற்றில் ஒரு பாக்கெட்டில், 16 பிஸ்கட்களுக்கு பதிலாக 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்துள்ளன. இதனை ஐடிசி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் டில்லி பாபு. ஆனால், அவருக்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. எனவே, அவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த வழக்கில் இத்தகைய தீர்ப்பு கிடைத்துள்ளது. வெறும் 75 பைசா மதிப்புள்ள ஒரே ஒரு பிஸ்கட் கொடுக்கப்படாததற்கு, ஐடிசி நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் செலுத்தி உள்ளது கவனம் பெற்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu