தொடர்ந்து நான்காவது நாளாக பிட்காயின் சரிவு

July 5, 2024

உலக அளவில் பிரபலமான கிரிப்டோ கரன்சியான பிட்காயின் தொடர்ந்து 4 நாட்களாக சரிவடைந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு பிட்காயின் மதிப்பு 71000 டாலர்கள் அளவில் இருந்தது. இது வரலாற்று உச்சமாகும். இந்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில் பிட்காயின் மதிப்பு 54442 டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் உச்சம் பெற்ற பிட்காயின் மதிப்பு ஜூன் மாதத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கான உறுதியான காரணங்கள் சொல்லப்படவில்லை. உலக அளவில் பங்கு சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கம் […]

உலக அளவில் பிரபலமான கிரிப்டோ கரன்சியான பிட்காயின் தொடர்ந்து 4 நாட்களாக சரிவடைந்து வருகிறது.

ஒரு மாதத்துக்கு முன்பு பிட்காயின் மதிப்பு 71000 டாலர்கள் அளவில் இருந்தது. இது வரலாற்று உச்சமாகும். இந்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில் பிட்காயின் மதிப்பு 54442 டாலர்களாக குறைந்துள்ளது. கடந்த மே மாதத்தில் உச்சம் பெற்ற பிட்காயின் மதிப்பு ஜூன் மாதத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதற்கான உறுதியான காரணங்கள் சொல்லப்படவில்லை. உலக அளவில் பங்கு சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கம் இதை தீர்மானிப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். பிட்காயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu