பிட்காயின் மதிப்பு மீண்டும் 70000 டாலர்களை எட்டி உள்ளது. இதனால் கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று, அனைத்து கிரிப்டோ கரன்சிகளும் உயர்ந்து வர்த்தகமாகின. குறிப்பாக, பிட்காயின் மதிப்பு 7.1% உயர்வை பதிவு செய்தது. அதன்படி, ஒரு வார காலத்தில் பிட்காயின் மதிப்பு மீண்டும் 70000 டாலர்களை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, பிட்காயின் மதிப்பு 70816 டாலர்களாக இருந்தது. பிட்காயினுக்கு அடுத்தபடியாக, ஈதர் கிரிப்டோகரன்சி 6% உயர்வை பதிவு செய்தது. ஈதரைத் தொடர்ந்து, சோலானா டோச் காயின் ஆகிய கிரிப்டோ கரன்சிகள் 4% அளவுக்கு கூடுதலாக உயர்ந்து வர்த்தகமாகின. பிட்காயினின் மதிப்பு மட்டுமின்றி, பிட்காயின் கிரிப்டோ நிறுவனத்தின் பங்கு மதிப்பும் கிட்டத்தட்ட 20% உயர்வை பதிவு செய்துள்ளது.