பிட்காயின் கிரிப்டோ கரன்சியானது தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இந்த நிலையில், தற்போது 2 வருட உச்சபட்ச மதிப்பை எட்டி உள்ளது.
இன்று, பிட்காயின் கிரிப்டோ கரன்சி மதிப்பு 64,000 டாலர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய மதிப்பு எட்டப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் போது, பிட்காயின் மதிப்பு 64285 டாலர்கள் அளவில் பதிவாகி இருந்தது. இதற்கு முந்தைய வர்த்தக நாளில், பிட்காயின் மதிப்பு 63850 ஆக இருந்தது. எனவே, 2% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிட்காயின் வரலாற்றில் உச்சபட்ச மதிப்பு 68999.99 டாலர்கள் ஆகும். இது கடந்த நவம்பர் 2021ல் பதிவானது. விரைவில் இந்த இலக்கை பிட்காயின் எட்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.