இமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களை களம் இறக்கிய பாஜக

March 27, 2024

இமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்எல்ஏக்களை கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் பாஜகவிற்கு வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்த 6 எம்எல்ஏக்களும் சில நாட்களுக்கு முன்னால் பாஜகவில் இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தலோடு ஜூன் ஒன்றாம் தேதி […]

இமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் அண்மையில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேர் மாறி வாக்களித்ததால் குறைந்த எம்எல்ஏக்களை கொண்ட பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். இதனால் பாஜகவிற்கு வாக்களித்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் உத்தரவிட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்த 6 எம்எல்ஏக்களும் சில நாட்களுக்கு முன்னால் பாஜகவில் இணைந்தனர். நாடாளுமன்ற தேர்தலோடு ஜூன் ஒன்றாம் தேதி இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒன்பது இடங்கள் காலியாக உள்ளது. இதனால் சட்டப்பேரவையின் பலம் தற்போது 59 ஆக குறைந்துள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் உட்பட 34 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. பாஜக 25 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. எனவே ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் குறைந்தபட்சம் ஒரு தொகுதியில் ஆவது வெற்றி பெற வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu