விஞ்ஞானிகள் விண்வெளியில் இதுவரை கண்டறியப்படாத அளவுக்கு மிகப்பெரிய கருந்துளை ஆற்றல் வீச்சை கண்டுபிடித்துள்ளனர். 'போர்பைரியன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆற்றல் வீச்சு, பால்வீதியை விட 140 மடங்கு பெரியதாகும். இது சுமார் 23 மில்லியன் ஒளி ஆண்டுகள் பரந்து விரிந்துள்ளது.
பூமியில் இருந்து 7.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான கருந்துளையிலிருந்து இந்த ஆற்றல் வீச்சு உருவாகியுள்ளது. LOFAR ரேடியோ தொலைநோக்கியின் உதவியுடன் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய கருந்துளை ஆற்றல் வீச்சுகளை விட 30% பெரியது. இந்த ஆய்வின் முன்னணி ஆய்வாளர் மார்ட்டின் ஒய், இந்த கருந்துளை ஆற்றல் வீச்சுகளை பிரபஞ்சம் உருவானதற்கு பிறகு நடந்த மிகவும் ஆற்றல் மிக்க நிகழ்வுகள் என்று விவரித்துள்ளார். இதை பற்றி ஆழமாக ஆய்வு செய்தால், பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியில் கருந்துளைகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது பற்றிய புதிய தகவல்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.