பெருவெடிப்புக்குப் பின் பிறந்த நுண்ணிய கருந்துளைகள், ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை நம் சூரிய மண்டலத்தை கடந்து செல்கின்றன என்ற அதிர்ச்சியான தகவல் புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது. இந்த கருந்துளைகள் கடந்து செல்லும் போது, கோள்களின் சுற்றுப்பாதையில் லேசான மாற்றங்கள் ஏற்படுவதால், வானியலாளர்கள் இதை கண்டறிய முடியும்.
இந்த கருந்துளைகள் பிரபஞ்சத்தில் ஏறக்குறைய 86% இருக்கும் இருண்ட பொருள் பற்றி அறிய உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். UC சாண்டா குரூஸ் மற்றும் MIT ஆராய்ச்சியாளர்கள், இந்த கருந்துளைகள் சூரியனை விட மிகவும் சிறியதாக இருக்கும் என்றும், ஒரு ஹைட்ரஜன் அணுவின் அளவே இருக்கும் என்றும் கூறுகின்றனர். இதுவரை இது ஒரு கோட்பாடுதான் என்றாலும், மேலும் ஆய்வுகள் மூலம் இந்த கோட்பாடு உறுதி செய்யப்படலாம்.