இளம் பெண்மணி உட்பட 6 பேரை வெற்றிகரமாக விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்றது ப்ளூ ஒரிஜின்

ஆகஸ்ட் 29, 2024 அன்று ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் NS-26 விண்கலம், மேற்கு டெக்சாஸ் விண்வெளித் துறைமுகத்தில் இருந்து 6 பேரை பூமியின் துணை வட்டப்பாதையில் அனுப்பி புதிய சாதனை படைத்தது. விண்கலம் 64.6 மைல் (104 கி.மீ) உயரத்தை எட்டியது. இந்த சாதனை பயணம், நியூ ஷெப்பர்ட் கலத்தின் 26-வது பயணம் மற்றும் 8 வது முறையாக மனிதர்களை சுமந்து சென்ற பயணம் ஆகும். NS-26 திட்டத்தில் மற்றுமொரு சாதனை அரங்கேற்றப்பட்டுள்ளது. விண்வெளிக்கு இளம் பெண்மணி […]

ஆகஸ்ட் 29, 2024 அன்று ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தின் NS-26 விண்கலம், மேற்கு டெக்சாஸ் விண்வெளித் துறைமுகத்தில் இருந்து 6 பேரை பூமியின் துணை வட்டப்பாதையில் அனுப்பி புதிய சாதனை படைத்தது. விண்கலம் 64.6 மைல் (104 கி.மீ) உயரத்தை எட்டியது. இந்த சாதனை பயணம், நியூ ஷெப்பர்ட் கலத்தின் 26-வது பயணம் மற்றும் 8 வது முறையாக மனிதர்களை சுமந்து சென்ற பயணம் ஆகும்.

NS-26 திட்டத்தில் மற்றுமொரு சாதனை அரங்கேற்றப்பட்டுள்ளது. விண்வெளிக்கு இளம் பெண்மணி அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த திட்டத்தில் பயணித்த 21 வயதான வட கரோலினா பல்கலைக்கழக மாணவி கார்சென் கிட்சென், கார்மன் கோட்டை (62 மைல்) கடந்த இளமையான பெண் என்ற வரலாறு படைத்துள்ளார். ப்ளூ ஒரிஜின் நிறுவனத்தில் பயிற்சியாளராக இருக்கும் கிட்செனின் தந்தை ஜிம், NS-20 திட்டத்தில் விண்வெளி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu