'கூகுள் பே, போன் பே' வழியாக டிக்கெட் பயணியர் வசதிக்காக பி.எம்.டி.சி. அறிமுகம்

November 24, 2022

'கூகுள் பே, போன் பே' வழியாக பணம் செலுத்தி பி.எம்.டி.சி. பேருந்துகளில் பயணிக்கும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பெங்களூரில் கொரோனா அதிகமாக இருந்த போது பணம் இல்லா டிக்கெட் நடைமுறையை பி.எம்.டி.சி., கொண்டு வந்தது. ஆனால், வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறால் 2021 அக்டோபரில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது அதே நடைமுறையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இது குறித்து பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட 1,500 டிக்கெட் இயந்திரங்கள் நடத்துனர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10க்குள் […]

'கூகுள் பே, போன் பே' வழியாக பணம் செலுத்தி பி.எம்.டி.சி. பேருந்துகளில் பயணிக்கும் வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பெங்களூரில் கொரோனா அதிகமாக இருந்த போது பணம் இல்லா டிக்கெட் நடைமுறையை பி.எம்.டி.சி., கொண்டு வந்தது. ஆனால், வங்கிகளின் தொழில்நுட்ப கோளாறால் 2021 அக்டோபரில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது அதே நடைமுறையை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

இது குறித்து பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறுகையில், ஆன்ட்ராய்டு தொழில்நுட்பம் கொண்ட 1,500 டிக்கெட் இயந்திரங்கள் நடத்துனர்களிடம் வழங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10க்குள் அனைத்து பேருந்துகளின் நடத்துனர்களுக்கும், இயந்திரங்கள் வழங்கப்படும். டிக்கெட் கொடுப்பது மட்டுமின்றி, 'வைபை' தொடர்பு, கியு கார்டை காண்பிக்கும் வசதி உள்ளது. பயணியர் ஏறும், இறங்கும் பேருந்து நிலையத்தை பதிவு செய்தால் கட்டணத்தை காண்பிக்கும். ரொக்கமாகவோ  அல்லது டிஜிட்டல் முறையிலோ பணம் செலுத்திய பின் டிக்கெட் பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu