பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் CE 04 என்ற புதிய மின்சார ஸ்கூட்டர் வாகனத்தை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் CE 04 மின்சார ஸ்கூட்டரின் விலை, இந்திய மதிப்பில் 1.49 லட்சம் ரூபாயாகும். உயர்ந்த மின்சார தொழில்நுட்பம் மற்றும் புதிய அம்சங்களுடன் CE 04 வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. இந்த வாகனம், மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது எனவும், 2.6 வினாடிகளில் 50 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வாகனத்தின் பேட்டரி திறன் 8.5 கிலோ வாட் ஹவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.