ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, விண்வெளி வீரர்கள் புச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் பூமிக்கு திரும்ப இயலாமல் போய்விட்டது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் இரு விண்வெளி வீரர்களையும் பூமிக்கு அழைத்து வர மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் போயிங் விண்வெளி வீரர்கள் அணியும் உடைகள் ஒன்றோடொன்று பொருந்தாத வகையில் உள்ளது. இதனால், அவசர நிலை ஏற்பட்டால், வீரர்கள், சரியான விண்வெளி உடை இல்லாமல் பூமிக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படலாம்.
இந்த சிக்கலுக்கு தீர்வாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செப்டம்பர் 24 அன்று மேலும் இரண்டு விண்வெளி உடைகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கொண்டு வர உள்ளது. இதில் ஒரு உடை, விண்வெளி வீரர்புச் வில்மோர்-க்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஏற்பாட்டின் மூலம், விண்வெளி வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.