போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் செப்டம்பர் 6, 2024 அன்று பூமிக்குத் திரும்பும் என நாசா அறிவித்துள்ளது. “வானிலை மற்றும் தொழில்நுட்ப நிலைமைகள் சீராக இருக்கும் பட்சத்தில், ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் EDT நேரப்படி, மாலை 6:04 PM (GMT 2204) மணிக்கு கிளம்பும். ஆறு மணி நேரத்திற்குப் பிறகு நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்கும்.” என்று நாசா கூறியுள்ளது.
ஸ்டார்லைனர் பூமிக்கு திரும்புவது முழுக்க முழுக்க தானியங்கி முறையில் செயல்படுத்தப்படுகிறது. தேவைப்பட்டால் ஹூஸ்டன் மற்றும் புளோரிடாவிலிருந்து தொலைதூர கட்டுப்பாடு வழங்கப்படும். ஏற்கனவே, டிசம்பர் 2019 மற்றும் மே 2022 ல், ஸ்டார்லைனர் விண்கலம் தானியங்கி முறையில் பூமிக்கு திரும்பியுள்ளது. முதல் பயணத்தில் ஐஎஸ்எஸ் ஐ அடைய தவறினாலும், இரண்டாவது பயணம் முழுமையான வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.