அமெரிக்க போயிங் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

September 13, 2024

4 ஆண்டுகளில் 25% ஊதிய உயர்வு என்ற ஒப்பந்தத்தை அமெரிக்க போயிங் ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். அதிக ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 96% பேர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தொடர்ந்து, 737 மேக்ஸ் மற்றும் 777 போன்ற முக்கிய விமானங்களின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், 33000 ஊழியர்கள் பாதிப்படைத்ஜ்த்துள்ளனர். ஏற்கனவே, விபத்துக்கள் மற்றும் $25 பில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பு என்கிற இரட்டைச் சுமையை போயிங் நிறுவனம் சுமந்து வருகிறது. இந்த […]

4 ஆண்டுகளில் 25% ஊதிய உயர்வு என்ற ஒப்பந்தத்தை அமெரிக்க போயிங் ஊழியர்கள் நிராகரித்துள்ளனர். அதிக ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 96% பேர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். தொடர்ந்து, 737 மேக்ஸ் மற்றும் 777 போன்ற முக்கிய விமானங்களின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால், 33000 ஊழியர்கள் பாதிப்படைத்ஜ்த்துள்ளனர்.

ஏற்கனவே, விபத்துக்கள் மற்றும் $25 பில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பு என்கிற இரட்டைச் சுமையை போயிங் நிறுவனம் சுமந்து வருகிறது. இந்த நிலையில், ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது நிறுவனத்தின் மீட்சியை மேலும் தாமதப்படுத்தும் என நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெர்க் எச்சரித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு இந்த வேலைநிறுத்தம் நீடித்தால், போயிங் நிறுவனம் $3.5 பில்லியன் வரை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu