தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரி பூம்புகாரில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர்கள், 43 பேரின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்களை விடுவிக்க தொடர்ந்து, 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தினால், 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதால், துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது, மேலும், மீனவர்களின் உரிமைகளை காக்கும் இந்த போராட்டம் தொடரும் என அவர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.