சீன வா்த்தக வழித்தட திட்டத்தில் இணைய பிரேஸில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீன வா்த்தக வழித்தட திட்டத்தில் இணைய இந்தியா தொடர்ந்து மறுத்துள்ளது. மேலும் பிரேஸிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க கண்டங்களை இணைக்கும் சீன ஓபிஓஆர் திட்டத்தில், சீனா-பாகிஸ்தான் வா்த்தக வழித்தடம் அடங்கியுள்ளது. ஆனால் இது காஷ்மீர் வழியாக செல்வதால் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கிறது. சமீபத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில், ரஷியா, பெலாரஸ், ஈரான், கஜகஸ்தான், மற்றும் பிற நாடுகள் இந்த திட்டத்துக்கு ஆதரவை உறுதிப்படுத்தின. அதற்கு மாறாக, இந்தியா மீண்டும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. பிரேஸிலின் பொருளாதார அதிகாரிகள் கூறியது போல், இந்த திட்டத்தில் சேர்வதன் மூலம் பயன்கள் இல்லை. மேலும் அமெரிக்காவுடன் உறவுகளை சிக்கலாக்கும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.