பிரேசிலின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான அனடெல், பிரேசிலிய விதிமுறைகளுக்கு இணங்காததற்காக, எலோன் மஸ்க்குக்கு சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் மீது தடைகளை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது.
உள்ளூர் சட்டப் பிரதிநிதியை நியமிக்காததற்காக, 20 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பாதிக்கும் வகையில், பிரேசிலில் எக்ஸ் தடை செய்யப்பட்டுள்ளது நினைவு கூறத்தக்கது. அதை தொடர்ந்து, பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்படி, டெலிகாம் ஆபரேட்டர்கள் எக்ஸ் தளத்தைத் தடுத்துள்ளார்களா என்பதை உறுதிசெய்ய, அனடெல் ஆய்வு செய்து வருகிறது. ஸ்டார்லிங்க் மட்டுமே இணங்க மறுக்கும் நிறுவனம் ஆகும். நீதிமன்ற உத்தரவுக்கு இணங்காததற்காக அபராதம் விதிக்கப்பட்டாலும், அதன் பிரேசிலிய வங்கிக் கணக்குகள் கிடைக்கப்படும் வரை எக்ஸ் பயன்பாட்டை அகற்ற ஸ்டார்லிங்க் மறுத்துள்ளது.