எகிப்தில் பிரைட் ஸ்டார் போர் பயிற்சி - இந்தியாவின் மிக் 29 போர் விமானங்கள் பங்கேற்பு

August 28, 2023

பல்வேறு உலக நாடுகள் பங்கேற்கும் ‘பிரைட் ஸ்டார்’ போர் பயிற்சி நேற்று முதல் எகிப்தில் தொடங்கியுள்ளது. கெய்ரோ விமானப்படை தளத்தில்l இந்த 21 நாள் போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில், முதல் முறையாக இந்திய விமானப்படை பங்கேற்றுள்ளது. இந்தியா தவிர, அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார், கிரீஸ் ஆகிய நாடுகள் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தியா சார்பாக, 150 ராணுவ வீரர்கள் அடங்கிய குழு, பிரைட் ஸ்டார் போர் பயிற்சியில் பங்கேற்றுள்ளது. மேலும், […]

பல்வேறு உலக நாடுகள் பங்கேற்கும் ‘பிரைட் ஸ்டார்’ போர் பயிற்சி நேற்று முதல் எகிப்தில் தொடங்கியுள்ளது. கெய்ரோ விமானப்படை தளத்தில்l இந்த 21 நாள் போர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்தப் பயிற்சியில், முதல் முறையாக இந்திய விமானப்படை பங்கேற்றுள்ளது. இந்தியா தவிர, அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார், கிரீஸ் ஆகிய நாடுகள் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இந்தியா சார்பாக, 150 ராணுவ வீரர்கள் அடங்கிய குழு, பிரைட் ஸ்டார் போர் பயிற்சியில் பங்கேற்றுள்ளது. மேலும், இந்திய விமானப் படையைச் சேர்ந்த மிக் 29 ரக போர் விமானங்கள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன. இது தொடர்பாக இந்திய விமானப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு உலக நாடுகள் பங்கேற்கும் போர் பயிற்சி மூலம், உலக நாடுகள் இடையே எல்லை தாண்டிய பிணைப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு சார்ந்த உறவு வலுப்படுவதாக கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu