இன்று பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் சரிந்து மீண்ட பங்குச்சந்தை, இன்றைய நாள் முழுவதும் சரிவு பாதையிலே பயணித்தது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 400 புள்ளிகள் வரை இழந்தது. இறுதியாக, இன்றைய நாளின் இறுதியில் 388.4 புள்ளிகளை இழந்து 65151.02 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 99.75 புள்ளிகளை இழந்து 1936525 புள்ளிகளாக உள்ளது.
அதானி குழும பங்குகளை ஜிகியூஜி பார்ட்னர்ஸ் வாங்கியது இந்த இன்றைய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி, அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்து வர்த்தகமாயின. அவை தவிர, டைட்டன், பஜாஜ் ஆட்டோ, எஸ் பி ஐ, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்தன. அதே வேளையில், ஐடிசி, எல்டிஐ மைண்ட் ட்ரி, பவர் கிரிட், ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை இறக்கமடைந்தன.