பங்குச் சந்தையில் சரிவு - சென்செக்ஸ் 365 புள்ளிகள் வீழ்ச்சி

August 25, 2023

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 365.83 புள்ளிகள் சரிந்து 64886.51 புள்ளிகளாக நிலை பெற்று உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 120.9 புள்ளிகள் சரிந்து, 19265.8 புள்ளிகளாக நிலை கொண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், வோடபோன் 9% உயர்வை பதிவு செய்துள்ளது. பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஐ […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று கடும் சரிவு பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 365.83 புள்ளிகள் சரிந்து 64886.51 புள்ளிகளாக நிலை பெற்று உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 120.9 புள்ளிகள் சரிந்து, 19265.8 புள்ளிகளாக நிலை கொண்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில், வோடபோன் 9% உயர்வை பதிவு செய்துள்ளது.

பஜாஜ் பின்சர்வ், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை இன்றைய தினத்தில் ஏற்றமடைந்துள்ளன. ஆனால், அதானி போர்ட்ஸ், எல் அண்ட் டி, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், எஸ் பி ஐ, ரிலையன்ஸ், பவர் கிரிட், ஹெச் டி எப் சி வங்கி, அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu