இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 666.25 புள்ளிகள் உயர்ந்து 85836.12 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 211.9 புள்ளிகள் உயர்ந்து 26216.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், மாருதி சுசுகி, வேதாந்தா, வோடபோன், ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அநேக நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.