நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில நிமிடங்களில் கிட்டத்தட்ட 1.6% அளவுக்கு பங்குச்சந்தை வீழ்ச்சி கண்டது. ஆனால் அதற்குப் பிறகு சரிவிலிருந்து மீண்டு, 0.1% சரிவுடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 80429.04 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 24479.05 புள்ளிகளிலும் நிலை பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அஸ்ட்ரோஜனக்கா, ஐடிசி, இன்போசிஸ், டிசிஎஸ், அதானி பவர், சுஸ்லான் எனர்ஜி, கல்யாண் ஜுவல்லர்ஸ், கோத்ரேஜ், இண்டஸ் டவர்ஸ், சுந்தரம் பைனான்ஸ், போரோஸில் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் பெற்றன. அதே சமயத்தில், ரயில் விகாஸ் நிகாம், இர்கான் இன்டர்நேஷனல், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன், வோடபோன், எஸ் வங்கி, எல் அண்ட் டி, மணப்புரம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல், ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை சரிவடைந்துள்ளன.