டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் லாபம் 60% உயர்வை பதிவு செய்துள்ளது. உலக அளவில் இந்த நிறுவனத்துக்கு போட்டியாக உள்ள பல்வேறு நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
ப்ளூம்பர்க் நிறுவனத்தின் அறிக்கை படி, கடந்த 2023 ல், பைட் டான்ஸ் நிறுவனத்தின் லாபம் 60% உயர்ந்துள்ளது. டென்சென்ட், அலிபாபா போன்ற போட்டி நிறுவனங்களுக்கு சவாலாக இது அமைந்துள்ளது. மேலும், உலக அளவில் மிகப் பெரிய ஊடக தளமாக முதலிடத்தில் நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்ட போதும், பைட் டான்ஸ் முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பைட் டான்ஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 225 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது.