உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான பைட் டான்ஸ், தனது புதிய கார் இயங்குதளமான டோங்செடிக்காக $600 மில்லியன் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அதன் மூலம், கிட்டத்தட்ட $3 பில்லியனாக டோங்செடி மதிப்பு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 ல் தொடங்கப்பட்ட டோங்செடி, DCar என்றும் அழைக்கப்படுகிறது. இது தற்போது 35.7 மில்லியன் மாதாந்திர பயனர்களைக் கொண்டு, ஆட்டோமொபைல் தொடர்பான தகவல்கள், வர்த்தகம் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், பைட் டான்ஸ் நிதி திரட்டுவது கவனம் பெற்றுள்ளது. ஜெனரல் அட்லாண்டிக், ஹாங்ஷான், கேகேஆர் மற்றும் கரோங் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட முன்னணி முதலீட்டாளர்கள் இந்த நிதியுதவியில் பங்கேற்கின்றனர். டோங்செடி, சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் இணையதளங்களான ஆட்டோஹோம் இன்க் மற்றும் பிட்டாட்டோ ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இந்த புதிய முதலீடுடன், டோங்செடி தனது சந்தை பங்கை மேலும் விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.