மந்திரி சபையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி அமைப்பு

மந்திரி சபையில் பாதுகாப்பு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு,பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றிற்கான கேபினட் கமிட்டியை அமைத்துள்ளது. அதில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவசேனா லோக் ஜனசக்தி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் […]

மந்திரி சபையில் பாதுகாப்பு பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான அரசு பாதுகாப்பு,பொருளாதாரம், அரசியல் ஆகியவற்றிற்கான கேபினட் கமிட்டியை அமைத்துள்ளது. அதில் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், ஜனதா தளம், சிவசேனா லோக் ஜனசக்தி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். பாதுகாப்புக்கான அமைச்சரவை குழுவில், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத் துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி, வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சமூக நீதித் துறை அமைச்சர் வீரேந்திர குமார், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கிஞ்சரபு ராம் மோகன் நாயுடு, பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் ஜுவால் ஓரம், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஜல் சக்தி அமைச்சர் சி ஆர் பாட்டீல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் சட்டத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளன

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu