கலிபோர்னியா சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நிறைவேற்றம்

August 29, 2023

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த இந்த சட்ட மசோதா உதவும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதா கலிபோர்னியா மாநில கவர்னர் கவின் நியூசோமிற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்பு அது சட்டமாக்கப்படும். சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியா ஆகும். இந்த மசோதாவை உறுப்பினர் […]

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டமன்றத்தில் சாதி பாகுபாடு எதிர்ப்பு சட்ட மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாதி பாகுபாட்டை எதிர்த்து மாநிலம் முழுவதும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமூகங்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த இந்த சட்ட மசோதா உதவும் என்று கூறப்படுகிறது. இந்த மசோதா கலிபோர்னியா மாநில கவர்னர் கவின் நியூசோமிற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்பு அது சட்டமாக்கப்படும். சாதி பாகுபாடு எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றிய முதல் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியா ஆகும்.

இந்த மசோதாவை உறுப்பினர் ஆயிஷா வஹாப் அறிமுகப்படுத்தினார். இதற்கு சாதி சமத்துவ மக்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவளித்தன. எஸ்பி403 எனப்படும் இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்ததன் மூலம் நீண்ட காலமாக இருக்கும் சாதி பாகுபாட்டில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும் என்று ஆயிஷா கூறியுள்ளார். இதனிடையே, இந்த மசோதா குறித்து வட அமெரிக்கா இந்துகள் கூட்டணி கூறுகையில் கலிபோர்னியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu